×

அமித்ஷாவை சந்தித்து ஏன்? ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: அதிமுகவில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ்;

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையை அவரிடம் எடுத்துக் கூறினேன். அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம்.

பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித் ஷாவைச் சந்தித்தேன். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன். நான் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனிக் கட்சியைத் தொடங்குவேன் என்று சொல்லவில்லை. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவரும் ஓபிஎஸ், வருகிற டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் என்ன முடிவை அறிவிக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Amitsha ,OPS ,Chennai ,Former ,Chief Minister ,O. Paneer Selvam ,Chief Executive Officer ,Obs ,Chennai Marina ,Jayalalithaa ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...