×

இ-பைலிங் முறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 

ஈரோடு, டிச. 5: இ-பைலிங் முறையை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கடந்த 1ம் தேதி முதல் இ-பைலிங் முறை கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்நிலையில் இ-பைலிங் முறையை கண்டித்து, ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் சரத் சுந்தர் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சார்பில், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமலும், உரிய தொழில்நுட்ப திறமையுடன் கூடிய நீதிமன்ற ஊழியர்களை நியமனம் செய்யாமலும், டிச.1 முதல் இ-பைலிங் நடைமுறையைக் கட்டாயப்படுத்தக்கூடாது என வக்கீல்கள் தெரிவித்தனர். மேலும், இ-பைலிங் முறையை உடனடியாக கைவிட வேண்டும் என வக்கீல்கள் வலியுறுத்தினர். நீதிமன்ற புறக்கணிப்பில் 1,250க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

 

Tags : Erode ,Tamil Nadu ,Erode… ,
× RELATED தாளவாடி தொழிலதிபர் கடத்தல்? போலீசார் விசாரணை