ஈரோடு, டிச.3: ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீசார் நேற்று முன்தினம் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடத்தில் மது அருந்திய வெள்ளித்திருப்பூர், ஆண்டவர் கோயில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (37) மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
