×

நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

 

மொடக்குறிச்சி, டிச.5: நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு தினசரி அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. 30ம் தேதி கிராம சாந்தி பூஜை நடந்தது. 1ம் தேதி கொடி கம்ப பூஜையும், 2ம் தேதி இரவு மகந்தேர் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சியில் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

Tags : Nanjai Uthukuli Mariamman Temple Chariot Festival ,Modakkurichi ,
× RELATED தாளவாடி தொழிலதிபர் கடத்தல்? போலீசார் விசாரணை