மதுரை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசிடம் அனுமதி 19 மாதங்கள் ஆனது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். புலன் விசாரணை அதிகாரிகள் மயில்வாகனன், விமலா, டாங்கரே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் தொடர்பாக அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 15க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
