புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மருந்து உரிம அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து சில்லறை மற்றும் மொத்த மருந்தகங்களிலும் பாதகமான மருந்து எதிர்வினைகளைப் புகாரளிக்க கியூ ஆர் குறியீடு மற்றும் கட்டணமில்லா எண் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மருந்தக விற்பனை நிலையத்திலும் 1800-180-3024 என்ற கட்டணமில்லா எண்ணையும் கியூஆர் குறியீட்டுடன் தெளிவாகக் ஒட்ட வேண்டும். இந்த உத்தரவை உங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து மெடிக்கல்களிலும் செயல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
