×

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிடட மலைபிரதேசங்களில் நெகிழி பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதில், மதுபான சில்லரை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் விலையோடு கூடுதலாக 10 ரூபாய் பெற்று கொள்ளவும், பருகிய பிறகான காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து கூடுதலாக கொடுத்த ரூ,10ஐ திரும்ப பெறும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் தரப்பில் உத்தரவிட்டது. இவை வரவேற்கத்தக்க ஒன்றாகும். இருந்தாலும், இத்திட்டதை அமலாக்குவதற்கான முறையான செயல்முறையினை டாஸ்மாக் நிர்வாகம் உருவாக்காமல் கடை ஊழியர்களிடம் திணித்துள்ளது.

ஏற்கனவே ஊழியர் பற்றாக்குறை இத்திட்டம் மேலும் கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்தும். இந்த காலி மதுபாட்டிகளை திரும்ப பெறும் திட்ட அமலாக்கம் என்பது சட்டத்திற்கும், இயற்கைக்கும் எதிரானது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வரை காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தி வைக்க கோரியும், இதற்கான மாற்றும் திட்டத்தை உருவாக்கவும் வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்ககளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : TASMAC ,Tamil Nadu ,Chennai ,Joint Action Committee ,High Court ,Nilgiris ,Kodaikanal ,Yercaud ,
× RELATED இருதய இடையீட்டு...