×

மயிலம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலம், டிச. 4: விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள், நெய்யால் நிரப்பப்பட்ட தீப குண்டலத்தில் மகா தீபத்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலைவல காட்சி நடைபெற்றது. பின்னர் சொக்கப்பானை என்னும் பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சிவஞான பாலைய சுவாமிகள் செய்திருந்தனர்.

Tags : Karthigai Deepam festival ,Mayilam ,Murugan ,Murugan temple ,Mayilam, Villupuram district ,Murugan… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...