தாடேபள்ளி: ஆந்திராவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் 25 வயது மகள் சாஹிதிபாய். இவர் பிடெக் படிக்கும் போது நந்தியால் மாவட்டத்தின் பெதன்சராலா மண்டலத்தில் உள்ள புக்கனப்பள்ளியில் உள்ள ராஜேஷ் நாயுடுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு குளிக்க சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மங்களகிரி டிஎஸ்பி முரளி கிருஷ்ணா தெரிவித்தார்.
