- புது தில்லி
- இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
- டிஆர்டிஒ
- முனைய பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி
- ஆய்வக
- சண்டிகர்…
புதுடெல்லி: அதிவேகமாக பறக்கும் போர் விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து விமானி வெளியேறி பாராசூட் மூலம் தப்பிப்பதற்கான ராக்கெட் ஸ்லெட் சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக செய்துள்ளது. சண்டிகரில் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள ரயில் பாதையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 800 கிமீ வேகத்தில் பயணித்த விமான அமைப்பின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பித்தல், வெளியேறும் செயல்முறை, விமானியை மீட்கும் அமைப்பு உள்ளிட்டவை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட டிஆர்டிஓ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிவேக ராக்கெட் ஸ்லெட் சோதனையை மூன்றாம் தரப்பு உதவியின்றி சுயமாக மேற்கொண்ட வெகுசில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
