×

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக கே.நவாஸ்கனி பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக கே.நவாஸ்கனி பொறுப்பேற்றுக்கொண்டார். இதுகுறித்து தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு அரசு, THE UMEED ACT, 1995 பிரிவு 14ன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 28.11.2025ல், தமிழ்நாடு வக்பு வாரியத்தை அமைத்தது. அரசாணையின்படி 2.12.2025 வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் கே.நவாஸ்கனி எம்பி தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும், பி.அப்துல் சமத் எம்எல்ஏ, குலாம் முஹம்மது மெஹ்தி கான், ஏ.மஹரிபா பர்வீன், ஏ.எஸ்.பாத்திமா முஜப்பர், எம்.முகம்மது பஷீர் மற்றும் எஸ்.கே.நவாஸ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், வாரிய முதன்மை செயல் அலுவலர் அப்தாப் ரசூல் கலந்து கொண்டனர்.

Tags : K. Navaskani ,Tamil Nadu Waqf Board ,Chennai ,Chief Executive Officer ,Government of Tamil Nadu ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...