தேர்தல் பார்வையாளர் ஆய்வு அரியலூரில் காவல்துறையினர் ரத்த தானம்

அரியலூர், ஜன.12: அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்தத்தின் இருப்பு குறைவாக உள்ளதை அறிந்த மாவட்ட காவல்துறையினர் ரத்ததானம் செய்ய முடிவு செய்தனர். இதனையொட்டி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி சீனிவாசன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல் தானும் ரத்தானம் செய்தார். அதேபோல் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார், ரோந்து போலீசார், பெண் போலீசார் மற்றும் ஆயுதபடை போலீசார் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். பின்னர் ரத்ததானம் செய்தவர்களுக்கு பழங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர் அறிவுச்செல்வன் தலைமையிலான மருத்துவக்குழுவினரால் சேகரிக்கபட்ட ரத்தங்கள் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்தவங்கியில் சேகரிக்கப்பட்டு அவசர தேவைக்கு பயன்படுத்த உள்ளது.

Related Stories:

>