சென்னை: தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 26 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
