டெல்லி : கரூர் நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அக்டோபரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் செப்.27ல் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
