×

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சாலை விபத்துகள் நிபுணர் குழுவை அமைத்து தடுக்க நடவடிக்கை வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

 

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் அருகே, அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஏழை குடும்பங்களை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தென்காசியில் நடந்த சாலை விபத்தில் லாரி மோதி சுரண்டை நகராட்சி பெண் நகர்மன்ற உறுப்பினர் உள்பட அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளுக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமான இளம் உயிர்கள் பலியாகின்றன. இப்படி சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இவற்றால், பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன. எனவே, தமிழ்நாடு அரசு இந்த சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த விபத்துகளுக்கான காரணங்கள் கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அதன் பரிந்துரைகள் அடிப்படையில், விபத்துகளுக்கான காரணங்களை போக்கி, விபத்துகள் இல்லா சாலை போக்குவரத்தை தமிழ்நாட்டில் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். அதே போன்று இளைஞர்களும், பொதுமக்களும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, விபத்துகளை தடுப்பதற்கு உதவிட கேட்டுக் கொள்கிறோம்.

Tags : Tamil Nadu ,Indian Communist Party ,Chennai ,Communist Party of India ,State Secretary ,M. Veerapandian ,Tirupattur ,Tenkasi… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...