×

கோபி கூட்டத்தில் உயிரிழந்த தொண்டர் உடலுக்கு எடப்பாடி நேரில் அஞ்சலி

 

கோபி: கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் நேற்று முன்தினம் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கள்ளிப்பட்டி அருகே கொண்டையம்பாளையத்தை சேர்ந்த அர்ஜூனன் (43), சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் கோபி அரசு மருத்துவமனைக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அர்ஜூனன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினரிடம் அதிமுக சார்பில் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்கட்டமாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.

Tags : Edappadi ,Gopi ,AIADMK ,Nallakaundanpalayam ,General Secretary ,Edappadi Palaniswami ,Arjunan ,Kondayampalayam ,Kallipatti ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது