×

பின் பவுலிங்கில் தமிழக வீரர் சாதனை

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மகிபால் சிங், சென்னையில் நடைபெற்ற சென்னை டைமண்ட்ஸ் 2வது சென்னை ஓபன் டென் பின்பவுலிங் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றுள்ளார். மகிபால் சிங், ஸ்டெப்லேடர் சுற்றின் முதல் போட்டியில், மூன்றாம் சீட் ஆனந்த் பாபு (தமிழ்நாடு), நான்காம் சீட் நவீன்சித்தம் (தெலுங்கானா) ஆகியோரை (222-183) வீழ்த்தினார். அரையிறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெனிகோபால் லஹோட்டி, ஆனந்த் பாபுவை (223-191) எளிதாக வென்றார். 10 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 95 பின் பவுலிங் வீரர்கள் கலந்து கொண்ட இந்த சாம்பியன்ஷிப், 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முடிந்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Mahipal Singh ,Chennai Diamonds 2nd Chennai Open Ten Pin Bowling Championship ,Anand Babu ,
× RELATED நான்காவது டி20 போட்டியில் இன்று...