புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத்தின் மகளை கடத்தியவர் 36 ஆண்டுக்கு பிறகு சிக்கினார். 1989ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வி.பி.சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் காஷ்மீரை சேர்ந்த முப்தி முகமது சயீத். இவரது மகள் ரூபாயா சயீத் கடந்த 1989 ஆம் ஆண்டு டிச.8 அன்று கடத்தப்பட்டார். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 5 நாட்களுக்குப் பிறகு பாஜ ஆதரவுடன் ஆட்சி வி.பி.சிங் அரசு 5 பயங்கரவாதிகளை விடுவித்த பின்னர் ரூபாயா சயீத் விடுவிக்கப்பட்டார். இந்த கடத்தல் தொடர்புடைய ஒருவரை 36 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ கைது செய்தது. ஷபாத் அகமது ஷாங்லு என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், யாசின் மாலிக்கின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் என்று கூறப்படுகிறது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவின் அலுவலகப் பொறுப்பாளராக இருந்ததாகவும், அந்த அமைப்பின் நிதியைக் கையாண்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அவரை சிபிஐ கைது செய்துள்ளனர்.
