×

தேர்தல் ஆணையம் கண்டித்து இன்று பாமக போராட்டம் ஒத்திவைப்பு

திண்டிவனம்: சென்னையில் பாமக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தைலாபுரம் தோட்டம் தலைமை நிலையத்தில் இருந்து விடுத்துள்ள அறிவிப்பில், சென்னையில் கனமழையின் காரணமாக கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல தான் போராட்டம் நடத்துவது மிகவும் சிரமம் என்பதால், சென்னையில் பாமக சார்பில், அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் ஆணையத்தை கண்டித்து 2ம் தேதி (இன்று) செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த போராட்டம் கடும் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Election Commission ,Bamaka ,Dindivanam ,Chennai ,Thailapuram ,Garden ,Headquarters ,
× RELATED திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்...