ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் லஞ்சம் பெற்றதாக மூன்று தனித் தனி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நடந்து வருகின்றது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கவேண்டும் என்றும், மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் சமீபத்தில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், வழக்குகள் தொடர்பாக பிரதமர் நெதன்யாகுவும் அதிபரிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
