×

பாஜ கூட்டணி பலவீனம் அடைந்ததா?: வானதி பதில்

 

கோவை: கோவையில் நேற்று நடந்த தேசிய அளவிலான செஸ் போட்டியை வானதி சீனிவாசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகியது பாஜவின் சித்து விளையாட்டு என்று திருமாவளவன் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டும். நாங்கள் பலவீனம் அடைந்தவர்கள் போன்று மக்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

அது திருமாவளவனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். ஆனால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தேஜ கூட்டணி தான் 2026 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். மக்களிடம் இருந்து எங்கள் கூட்டணிக்கு வாக்குகளை அதிகமாக பெறுவது தான் எங்களுடைய அசைன்மென்ட் என்று பதில் அளித்தார்.

 

Tags : BJP ,Vanathi ,Coimbatore ,Vanathi Srinivasan ,MLA ,Thirumavalavan ,Sengottaiyan ,AIADMK ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...