லண்டன்: சர்வதே வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் உலகளாவிய அமைப்புகளில் சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சில் முதன்மையானது. இதில் பிரிவு பி-க்கான நாடுகள் தேர்தல் லண்டனில் நடந்தது. இதில், மொத்தமுள்ள 169 வாக்குகளில் இந்தியா 154 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தியாவுடன் இப்பிரிவில் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் வரும் டிசம்பர் 4ம் தேதி கூடி, அடுத்த 2 ஆண்டுகளுக்கான அதன் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும்.
