×

அமெரிக்க கால்பந்து வீரர் உடனான மாடல் அழகியின் காதல் உறவு முறிந்தது: பிரிவுக்கு தூரம்தான் காரணமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல மாடல் அழகி அலிக்ஸ் ஏர்லே மற்றும் அமெரிக்க கால்பந்து வீரர் பிராக்ஸ்டன் பெரியோஸ் ஆகியோர் தங்கள் இரண்டு ஆண்டு கால காதல் உறவை முறித்துக் கொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவரும், மாடல் அழகியுமான அலிக்ஸ் ஏர்லே – ஹூஸ்டன் டெக்சான்ஸ் அணியின் முக்கிய வீரரான பிராக்ஸ்டன் பெரியோஸ் ஆகிய இருவரும், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் முறையாகச் சந்தித்து நண்பர்களாக பழகினர். அதன்பின்னர் அந்த ஆண்டின் இறுதியில் இருவரும் காதலிப்பதாக வெளியுலகிற்கு அறிவித்தனர்.

கடந்த மாதம் (நவம்பர்) தான் இவர்கள் இருவரும் தங்களது இரண்டு ஆண்டு காதல் பயணத்தின் நிறைவை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், நீண்ட தூரம் மற்றும் பணிச்சுமை காரணமாக இருவரும் ஒருமித்த கருத்துடன் பிரிய முடிவு செய்துள்ளனர். அலிக்ஸ் ஏர்லே பெரும்பாலும் மியாமி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களிலும், பிராக்ஸ்டன் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹூஸ்டன் நகரிலும் வசிப்பது இவர்களுக்கிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த பிரபலமான நடன நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் அலிக்ஸ் ஏர்லே போட்டியிட்டபோது, பிராக்ஸ்டன் நேரில் வராமல் வீடியோ மூலம் மட்டுமே வாழ்த்து கூறியது அப்போதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. தற்போது இவர்கள் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

Tags : Los Angeles ,Alix Earle ,Braxton Perez ,Alix Earle… ,
× RELATED தண்டவாளத்தில் வெடிபொருள்...