பீஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் புதிய தூதரக கட்டிடத்தை இந்தியா திறந்துள்ளது. இந்தியா- சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- சீனா இடையே நீடித்து வந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து சீனாவுடனான உறவை இந்தியா மீண்டும் வலுப்படுத்தி வருகிறது.
அதன்ஒரு பகுதியாக ஷாங்காய் நகரில் புதிய தூதரக கட்டிடத்தை இந்தியா திறந்துள்ளது. ஷாங்காய் நகரின் சாங்னிங் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகத்தில் 1,436.63 சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன வசதிகள், பசுமையான வடிவமைப்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு அம்சங்களுடன் புதிய கட்டிடவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தூதரக கட்டிடத்தை சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத் திறந்து வைத்தார். இன்று முதல் புதிய தூதரக வளாகத்தில் முழு செயல்பாடுகள் தொடங்க உள்ளது.
