ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் நாகூர் மாவட்டத்தில் பெட் கிராமத்தில் இருந்த ஏடிஎம் மையத்தில் இருந்து மர்மநபர்கள் ரூ.12லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். இரவு நேரம் என்பதால் இது குறித்து யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஏடிஎம் இயந்திரம் எரிந்த நிலையில் இருந்ததை பார்த்த கிராம மக்கள் போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கேஸ் கட்டரை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் உடைத்து திறந்துள்ளனர். ஆதாரங்களை அழிப்பதற்காக இயந்திரத்திற்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். சிசிடிவி கேமராவுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வீடியோ பதிவையும் கொள்ளையர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். தொழில்நுட்ப குழுக்கள் வரவழைக்கப்பட்டு கிடைக்கக்கூடிய காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே கொள்ளையடித்தவர்கள் குறித்த எண்ணிக்கை தெரியவரும்.
