- ஈரான்
- உலக கோப்பை
- துபாய்
- ஐக்கிய மாநிலங்கள்
- அமீர் மெஹ்தி அலவி
- ஈரான் கால்பந்து கூட்டமைப்பு
- ஈரானிய கால்பந்து குழு
துபாய்: அமெரிக்காவில் அடுத்த வாரம், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்க உள்ளன. இப்போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக, ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஈரான் கால்பந்தாட்ட கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் அமிர் மெஹ்தி ஆலவி நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈரான் கால்பந்தாட்ட குழுவின் அதிகாரிகள், அமெரிக்க விசா பெறுவதில் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவின் கெடுபிடிகள் காரணமாக, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ஈரான் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஃபிபா நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம்’ என்றார்.
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூனில் வெளியிட்ட அறிவிப்பில், ஈரான், ஹெய்தி (கடந்த வாரம் உலகக் கோப்பை போட்டிகளில் ஆட தகுதி பெற்ற நாடு) உள்ளிட்ட 12 நாடுகளின் பிரஜைகள், அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
