- திருவாபரணம்
- ஆணையாளர்
- திருவனந்தபுரம்
- திருவிடங்கூர் தேவாசம் வாரியம்
- முராரி பாபு
- பைஜு
- சுதேஷ் குமார்
- தேவசம் வாரியம்
- பத்மகுமார் வாசு
- Sabarimalai
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகளான முராரி பாபு, பைஜு, சுதீஷ்குமார் மற்றும் முன்னாள் தேவசம் போர்டு தலைவர்களான பத்மகுமார், வாசு உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பைஜு கடந்த 2019ம் ஆண்டு திருவாபரணம் ஆணையராக பணியில் இருந்தார்.
ஆனால் அப்போது தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற போது இவர் எந்தவித பரிசோதனையும் நடத்தவில்லை. இந்நிலையில் பைஜு முன்ஜாமீன் கோரி கொல்லம் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே நேற்று இவரை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
