புதுடெல்லி: மிசோரம் போலீசார் ரூ.1.41கோடி மதிப்புள்ள 4.72கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக இந்தியா – மியான்மர் எல்லையில் மிசோரமில் உள்ள ஐஸ்வால் மற்றும் சம்பாய், அசாமில் உள்ள ஸ்ரீபூமி குஜராத்தின் அகமதாபாத் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 27ம் தேதி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி சான்றுகள் இந்தியர்கள், மியான்மரை சேர்ந்தவர்கள் சார்பாக சூடோஎபிட்ரின் மற்றும் காஃபின் அன்ஹைட்ரஸ் வாங்கியதாக குறிப்பிடுகின்றன. மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கு இந்தியர்களின் ஜிஎஸ்டி சான்றிதழ் பயன்படுத்தியது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
