×

பீகார் அரசியல் நிலவரம் கார்கே – ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை

புதுடெல்லி: பீகார் தேர்தலைத் தொடர்ந்து, அங்குள்ள அரசியல் நிலவரம் தொடர்பாக மாநில கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் பீகார் மாநில பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு, மாநில கட்சித் தலைவர் ராஜேஷ் ராம் ஆகியோரும் உடன் இருந்தனர். அதில் தேர்தல் தோல்விக்கு, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பெண்களுக்கு ரூ.10,000 நிதி உதவி வழங்கியது, உட்கட்சி பூசல், தாமதமான வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்டவை காரணம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Bihar ,Kharge ,Rahul Gandhi ,New Delhi ,Bihar elections ,Mallikarjun Kharge ,Krishna Allavaru ,Rajesh Ram… ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...