கோவை: கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த பேட்டி: ஒவ்வொரு கட்சியும் தன் அணியை வலுப்படுத்ததான் போராடும். அதில் கூட்டணி வைக்காதீர்கள் என சொல்லமுடியாது. நான் கூட்டணி வைக்கவில்லை. தனித்துதான் போட்டியிடுகிறேன். நீங்க ஏன் கூட்டணி வைக்கிறீர்கள் என நான் கேட்க முடியாது.
பத்திரிகையாளர்கள் கேள்வியை கேள்வியாக வைத்தால் பரவாயில்லை. நீங்கள் கேள்வியே கேட்கத்தெரியாமல் கேள்வியை கேட்பது, அதற்கு விளக்கம் சொன்னால், மரியாதையாக பேசுங்கள் என்பது. எனக்கு மரியாதை கற்பித்து கொடுத்தால் எனக்கு கோபம் வருமா? வராதா? கேள்விக்கு பதில் சொல்பவரிடம் இருக்க வேண்டிய கண்ணியம், நாகரீகம் உங்களுக்கும் இருக்க வேண்டும். நீங்க ஒழுங்கா இருங்க.
நானும் ஒழுங்கா இருப்பேன். நீங்க நல்ல கேள்விகளை கேளுங்கள், நான் அழகான பதில்களை சொல்வேன். நான் மேடையில் பேசக் கற்றுக்கொண்டது எல்லாம் பின்னால் தான். எப்படி சண்டை போடுவது என்று தான் அஞ்சு வயசுல கற்றுக்கொண்டேன். நீங்க மொதல்ல வருத்தம் தெரிவிங்க, இதுமாதிரி நடந்து கொள்ளமாட்டோம் என்று. இவ்வாறு அவர் கூறினார்.
