×

காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்து காதலன் தற்கொலை

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(26). எலக்ட்ரீசியனான இவர், பிளஸ்2 படித்து வரும் 17வயதான மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த காதல் விவகாரம் தெரிய வந்து பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த இருவரும், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை மாணவியின் பெற்றோர் சொந்த வேலையாக வெளியில் சென்று இருந்த நிலையில், காலை 10 மணியளவில் மாணவியின் வீட்டுக்கு வந்த வசந்தகுமார், மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கியதும், இறந்ததாக நினைத்து வசந்தகுமார் காதலி வீட்டிலேயே புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Aravakurichi ,Vasantha Kumar ,Velambadi ,Karur district ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது