- வள்ளலார் சர்வதேச மாநாடு
- சென்னை
- வள்ளலார்
- அமைச்சர்
- சேகர்பாபு
- திரு அருட் பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க சர்வதேச மாநாடு
- இந்து மதம்
- மற்றும் நன்கொடைகள்
- பி.கே.சேகர்பாபு...
சென்னை: வள்ளலாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் வள்ளலார் பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று ஆணையர் அலுவலகத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க பன்னாட்டு மாநாடு – 2026 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வள்ளலார் சர்வதேச மாநாட்டை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் வள்ளலார் பன்னாட்டு மாநாட்டினை சென்னையில் 2026 ஜனவரி மாதத்தில் நடத்துதல், மாநாட்டு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் வகையில் துறை மற்றும் சன்மார்க்க அமைப்புகளை கொண்ட குழுக்களை அமைத்தல், வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க வரும் சன்மார்க்க அன்பர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல், வள்ளலாரின் நெறிகளை பரப்பிடும் வகையிலான கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் அமைத்தல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வள்ளலார் குறித்த இலக்கிய போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குதல்,
கருத்தரங்கம், ஆய்வரங்கம், சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், நாள் முழுவதும் அன்னதானம் வழங்குதல், சிறந்த சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல், மாநாட்டு மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர் வெளியிடுதல், வள்ளலாரின் தத்துவங்கள் மற்றும் அருள்நெறியைப் பரப்பிடும் வகையில் முழுவதும் பெண்களே பங்கேற்கும் பேரணி நடத்துதல் போன்ற பொருண்மைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் துரை.ரவிச்சந்திரன், கூடுதல் ஆணையர்கள் ஹரிப்ரியா, கவிதா, ஜெயராமன், மங்கையர்க்கரசி, ஆலோசனை குழு உறுப்பினர்கள் சுகிசிவம், தேச மங்கையர்க்கரசி, இணை ஆணையர்கள் வான்மதி, ஜோதி, ரேணுகாதேவி, முல்லை, கவெனிதா, வடலூர் தெய்வ நிலையத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் அழகானந்தன், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் அருள் நாகலிங்கம், வெற்றிவேல், நிர்வாகிகள் வெங்கடேசன், செந்நெறி தண்டபாணி, செயல் அலுவலர் ஜெ. ராஜா சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
