×

பிரத்யூஷா பானர்ஜி மரண வழக்கில் திருப்பம்; நடிகை காம்யாவிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு: காதலன் ராகுல் ராஜ் சிங் ஆவேசம்

மும்பை: மறைந்த நடிகை பிரத்யூஷாவின் இறப்பை வைத்துத் தவறான பிரசாரம் செய்வதாக நடிகை காம்யா பஞ்சாபி மீது ராகுல் ராஜ் சிங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். புகழ்பெற்ற இந்தித் தொடரான ‘பாலிகா வது’ மூலம் பிரபலமான நடிகை பிரத்யூஷா பானர்ஜி, கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தில் அவரது காதலனான நடிகர் ராகுல் ராஜ் சிங் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. நடிகையின் மரணத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய தோழியான காம்யா பஞ்சாபி, ராகுல் மீது பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைப் பொதுவெளியில் முன்வைத்திருந்தார்.

ராகுல் ராஜ் சிங் தான் கொலை செய்தார் என்பது போலவும், பிரத்யூஷாவைத் துன்புறுத்தினார் என்றும் காம்யா தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில் காம்யா பஞ்சாபிக்கு எதிராக ராகுல் ராஜ் சிங் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘என் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்திய காம்யா பஞ்சாபியின் செயல் கிரிமினல் குற்றத்திற்கு இணையானது. பிரத்யூஷாவின் மரணத்தைப் பயன்படுத்தி அவர் விளம்பரம் தேடிக் கொண்டதுடன், குறும்படம் ஒன்றையும் பிரபலப்படுத்த முயன்றார். இதற்காக அவர் மீது ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

மேலும், பிரத்யூஷா தனது பெற்றோருடனான பிரச்னை மற்றும் பணக்கஷ்டம் காரணமாகவே மனமுடைந்து காணப்பட்டார். அதனால் தற்கொலை செய்து கொண்டார். காம்யாவிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் நீதிமன்றத்திற்கு வராமல் தவிர் த்து வருகிறார்’ என்றும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Pratyusha Banerjee ,Kamya ,Rahul Raj Singh ,MUMBAI ,KAMYA PUNJABI ,PRATYUSHA ,
× RELATED கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி...