×

கலீதா ஜியா உடல்நிலை கவலைக்கிடம்

டாக்கா: வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவரும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா(80)வுக்கு கடந்த மாதம் 23ம் தேதி நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அவரது சிறுநீரக செயல்பாடு முற்றிலும் நின்று விட்டது. அதனால் டயாலிசிஸ்க்கு உட்படுத்தப்பட்டார். உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் வரு பிப்ரவரியில் பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில் கலீதா ஜியாவின் உடல் நலக்குறைவு பிஎன்பி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags : Khaleda Zia ,Dhaka ,Bangladesh Nationalist Party ,BNP ,
× RELATED கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி...