×

டிட்வா புயல் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

 

சென்னை: டிட்வா புயல் காரணமாக இன்று (29.11.2025) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.

இலங்கை அருகே டிட்வா புயல் உருவாகியுள்ளதை அடுத்து இலங்கையில் கடும் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அங்கு மழை நீடித்து வருகிறது. தரைப்பகுதியில் இருந்து டிட்வா புயல் கடல் பகுதிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கனமழை பெய்யக் கூடிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆசியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், நாகை, சிவகங்கை

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… தஞ்சாவூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர், ராமநாதபுரத்தில் 4 வட்டங்கள் (ராமநாதபுரம், ராமேஸ்வரம், ஆர்.எஸ்.மங்களம், திருவாடனை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : Holiday ,Storm Tidwa ,Chennai ,Sri Lanka ,Tamil Nadu ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...