புதுடெல்லி; டெல்லியில் நடந்த மெகா போதைப்பொருள் வேட்டையில் 40 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தெலங்கானாவிற்கு கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் கும்பலை பிடிக்க டெல்லி-என்சிஆரில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 3 வெளிநாட்டினர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆவார்கள். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பன்னாட்டு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய மொத்தம் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது கோகோயின், எம்டிஎம்ஏ, ஹெராயின் மற்றும் ரூ.7 கோடி மதிப்புள்ள 5,000க்கும் மேற்பட்ட எம்டி மாத்திரைகள் உட்பட ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள்.
