×

நாதக பெரிய கட்சி; 2026 தேர்தலில் எங்களுக்கு யாரும் போட்டியில்லை: சீமான் காமெடி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவீரர் தின மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: மரங்கள், மாடுகளின் மாநாடு என்றால் சிரிகின்றனர். 2026 தேர்தலுக்கு பிறகு பிரபாகரன் பெயரை அனைவரையும் உச்சரிக்க வைப்பேன். நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது.

வேறு எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவோம் என அறிவிக்க முடியுமா? நாம் தமிழர் கட்சி தான் பெரிய கட்சி. 2026 தேர்தலில் எங்களுக்கு யாரும் போட்டி இல்லை. தமிழர்களிடம் சாதி, மதப் பெருமை மட்டுமே உள்ளது. அரசியலில் என்னை துணை நடிகராக தான் வைத்துள்ளனர். பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.

Tags : Nathaka Periya Katchi ,2026 elections ,Seeman ,Karaikudi ,Heroes' Day ,Karaikudi, Sivaganga district ,Naam ,Tamilar Party ,Coordinator ,Prabhakaran ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்