சென்னை: அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பரிந்துரைகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
