சென்னை: பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் மணிக்கு 58 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு ஓகா புறப்படவிருந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று இரவு 8.50க்கு சென்னை புறப்பட வேண்டிய ரயில் மானாமதுரையில் இருந்து புறப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து நாளை இரவு 8.50க்கு சென்னை புறப்படும் ரயில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
