×

பட்டியலின பெண், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்க்கு எதிராக, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

திருப்பூர்: அவினாசி திருமலை கவுண்டன் பாளையம் அரசு பள்ளிகளில் சமையல் மீதான தீண்டாமை விவகாரத்தில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த திருமலை கவுண்டன் பாளைய பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சமையலராக பாப்பாள் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துள்ளார். இங்க ஒரே காரணத்திற்காக அந்த பள்ளியில் சமைத்த உணவை குழந்தைகள் உட்கொள்ள மாட்டார்கள் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை சமையல் பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியில் பூட்டி உள்ளார்கள். இந்த விஷியம் தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள், பல்வேறு அமைப்பினர் மேற்கொண்டனர்

இது தீண்டாமை வன்கொடுமை வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது திருப்பூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் திருப்பூர், நீதிமன்ற வளாகத்தில் வன்கொடுமை வழக்குகளான சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த மீனாட்சி மேல்முறையீட்டு காரணமாக வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த 35 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மிதிமுள்ள 31 பேர் மீதான வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் வன்கொடுமை தடுப்பு நீதிபதி சுரேஷ் இன்று தீர்ப்பு வாசிக்கும்போது. இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள 32 பெயரில் 25 பேரை விடுவித்தும். பெண் உட்பட 6 பேரை குற்றவாளி எனவும் அறிவித்துள்ளார். மேலும் இந்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பழனிச்சாமி கவுண்டர், சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகிய 6 பேரின் தண்டனை விவரங்களை இன்று மதியம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கானது சுமார் 7ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruppur ,Avinashi, Tirumalai, Kavandan Palayam ,Tirumalai Kavandan Palayam ,Avinashi, Tiruppur district ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...