சென்னை: டிட்வா புயல் கனமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் திமுகவும் களத்தில் துணையாக நிற்க வேண்டும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
