தூத்துக்குடி: டிட்வா புயல் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. தூத்துக்குடியில் இன்று 5ஆவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 50,000க்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
