சென்னை: Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கருத்த மச்சான் என்ற இளையராஜா பாடல்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பாடலை நீக்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கை நிராகரித்தது. இளையராஜாவின் பாடல்களின் புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் படத்தில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் மனுவுக்கு பதில் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.
