டெல்லி: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 530 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரிக்கும். 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயலின் வேகம் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 430 கி.மீ தெற்கு, தென்கிழக்கில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
