கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 33 பேர் பலியாகி விட்டனர். இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 33 பேர் பலியாகி விட்டனர். 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 பேர் காணாமல் போயுள்ளனர்.
கனமழை காரணமாக இலங்கையின் பல இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சில பகுதிகளில் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சாலைகள் மூடப்பட்டன. பதுல்லா மற்றும் நுவரெலியாவின் மலைப்பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
