×

அதிகாரிகளை விமர்சனம் செய்ய அரசியல்வாதிகளுக்கு உரிமை உண்டு: சீமான் மீது டிஐஜி வழக்கு ரத்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அவதூறாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை திருச்சி நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து சீமான், திருச்சி நீதிமன்றத்தில் தனக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, திருச்சி நீதிமன்றத்தில் நடக்கும் சீமான் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, ‘‘அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை உண்டு. அதிகாரிகள் தங்களது கடமையை மட்டும் செய்தால் எந்தவித பிரச்னையும் இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் கீழமை நீதிமன்றங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே, சீமான் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Tags : HC ,DIG ,Seeman ,Madurai ,Varunkumar ,Trichy ,Naam Tamilar Katchi ,
× RELATED கோயிலின் இடத்தில் இங்குதான் தீபம்...