- அஇஅதிமுக
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முன்னாள் புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- புதுக்கோட்டை
- முன்னாள்
- புதுச்சேரி
- நாராயணசாமி
- பீகார்...
புதுக்கோட்டை: அதிமுக, பாஜவோடு கூட்டு சேர்ந்து தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வேலைகளை செய்து வருகிறது என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை பாஜ செய்தது. தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் துறையை பாஜவின் அங்கமாக மாற்றி உள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் பீகார், மேற்கு வங்கம், ஒடிசாவில் இருந்து வந்து ஏராளமானோர் பணிபுரிகிறார்கள். அவர்களது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. அவர்களுக்கு இரண்டு மாநிலத்திலும் வாக்கு உள்ளது. இதற்கு எந்தவித பதிலும் தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இந்தியா கூட்டணியை குலைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பாஜ தலைமையில் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் அதிமுக சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை குலைப்பதற்கும், தமிழ்நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வேலைகளை செய்து வருகிறது. மாநிலத்தின் ஆளுநர், மாநில அரசையே விமர்சிக்கும் நிலையை தமிழ்நாட்டில் பார்க்கிறோம். அதேபோல் புதுச்சேரியிலும் கிரண்பேடி செய்தார். அந்த நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
