×

வி.பி.சிங் நினைவு நாள் சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் ஓங்குக. தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர், என் மீது அன்பு காட்டியவர், பதவிகளை துச்சமாக நினைத்து, சமூகநீதி உயிர்க்கொள்கையாக மதித்தவர். தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது. 2023ம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் முழுவுருவச்சிலை. இடபிள்யூஎஸ், நீட் என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே ‘மீஸ்’ செய்கிறோம். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : VP Singh Memorial Day ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,VP Singh ,Tamil Nadu ,Kalaignar… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...