×

வெள்ளாற்றில் மணல் திருடியவர் கைது

முஷ்ணம், நவ. 28: முஷ்ணம் பகுதியில் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொ.ஆத்தூர் வெள்ளாற்றில் மாட்டுவண்டியில் மணல் திருடியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அரியலூர் மாவட்டம் ஆத்துக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரியசாமி(46) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பெரியசாமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : Vellarat ,Weerasekaran ,Sub-Inspector ,Chandra ,Mushnam ,Periyasamy ,Athukurichi ,Ariyalur district… ,
× RELATED பெண்ணாடம் அருகே சோகம் பள்ளி வேன் மோதி பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி