×

செவலூரில் நடந்த கபடி போட்டியில் வென்ற அணிக்கு பரிசு வழங்கல்

பொன்னமராவதி,ஜன.11: பொன்னமராவதி அருகே உள்ள செவலூரில் தீப்பாஞ்சாள் கபடி குழுவினரால் மின்னொளிக் கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த அணி வீரர்கள் பங்குபெற்று கபடி விளையாடினர். இதில் முதல் பரிசை திருமயம் அணியினரும், இரண்டாம் பரிசை பரம்பூர் மேட்டுப்பட்டி அணியினரும், மூன்றாம்பரிசை குருக்களையாபட்டி அணியினரும், 4வது பாரிசை தஞ்சாவூர் சித்ரகுடி அணியினரும் பெற்றனர். வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, தீப்பாஞ்சாள் கபடி குழு, மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் வழங்கினர். பாண்டிச்செல்வம், ஆசைத்தம்பி,சேதுபதி, சிவக்குமார் ஆகியோர் வெற்றிக்கோப்பை வழங்கினர்.

Tags : team ,Sevalur ,competition ,
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...